ஆப்நகரம்

காலா படம் பார்க்க லீவு போட சொல்லும் தனுஷ்

காலா படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த டுவிட்டில் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் படம் பார்க்க லீவு போட சொல்லி டுவிட் செய்துள்ளார்.

Samayam Tamil 28 May 2018, 10:16 pm
காலா படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த டுவிட்டில் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் படம் பார்க்க லீவு போட சொல்லி டுவிட் செய்துள்ளார்.
Samayam Tamil dhanush


இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படம் காலா. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் காலா படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முதல் டிரைலர் ;

காலா படத்தின் முதல் டெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து இன்று இரண்டாவது டிரைலர் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததார்.

விடுமுறை விண்ணப்பம் ;
மேலும் படம் உலகளவில் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என்றும் படம் ரிலீஸ் தேதியை குறித்து வைத்துக் கொண்டு, படத்தைப் பார்ப்பதற்காக விடுமுறை விண்ணப்பத்தை தயாராக்கி வைத்திருங்கள் என டுவிட் செய்திருந்தார்.



இரண்டாவது டிரைலவர் வீடியோ இதோ :
இந்நிலையில் தனுஷ் குறிப்பிட்டிருந்ததைப் போல காலா படத்தின் 2வது டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு சரியாக வெளியானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்