ஆப்நகரம்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு அழைப்பு!

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ராஜமௌலி, நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 29 Jan 2019, 3:07 pm
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘சர்க்கார்’. இந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது.
Samayam Tamil keerthi-raja


இந்நிலையில் பிரபல இயக்குனர் ராஜமௌலி ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இரண்டாவது ஹீரோயின் கேரக்டரில் நடிக்கிறாராம். இதனால் கீர்த்தி சுரேஷ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா தான் முதன்மை ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்