ஆப்நகரம்

நடிகை வரலட்சுமியின் வில்லத்தனத்தைப் பார்த்து மிரண்டு போன நடிகை கீர்த்தி சுரேஷ்!

‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகை வரலட்சுமியின் வில்லத்தனமான நடிப்பைப் பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் மிரண்டுபோயுள்ளார்.

Samayam Tamil 17 Oct 2018, 3:57 pm
நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இதே படத்தில் நடிகை வரலட்சுமியும் நடித்துள்ளார். இந்தப்படம் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்கவுள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
Samayam Tamil vishal-varu


நடிகை வரலட்சுமி ‘சர்கார்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவர் ‘சண்டக்கோழி 2’ படத்தில் வில்லியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார்.

‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகை வரலட்சுமி கொடூர வில்லியாக மிரட்டியிருக்கிறாராம். படத்தில் கீர்த்தி சுரேஷ், அவருடன் நடித்ததில் இருந்து அவரிடம் பேச எனக்கு பயமாக இருக்கிறது. மிரட்டால் என்றால் அப்படி ஒரு மிரட்டல் என்று கூறியுள்ளார் கீர்த்தி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்