ஆப்நகரம்

தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 12 Jan 2019, 3:40 pm
கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ‘சர்க்கார்’, ‘சண்டக்கோழி 2’, ‘சீமராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘தானா சேர்ந்த கூட்டம்‘ ஆகிய படங்கள்.
Samayam Tamil keerthi-suren


இந்தப் படங்களில் ‘சர்கார்’, ‘நடிகையர் திலகம்’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது. இநுதப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கவுள்ளார். தற்போது இந்தப் படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்