ஆப்நகரம்

சூர்யாவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்?

'கொம்பன்' பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட வெளியான தகவலை இயக்குனர் சமீபத்திய நிகழ்ச்சியில் உறுதி செய்தார்.

TNN 4 Aug 2016, 6:31 pm
சென்னை: 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட வெளியான தகவலை இயக்குனர் சமீபத்திய நிகழ்ச்சியில் உறுதி செய்தார்.
Samayam Tamil keerthy suresh in talks for suriya muthaiahs project
சூர்யாவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்?


சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'தர்மதுரை' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட இயக்குனர் முத்தையா சூர்யாவுடன் இணைந்து படம் இயக்கவிருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக முன்னணி நடிகையாக உருவாகி வரும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சூர்யாவுடன் ஜோடி சேர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, இப்படத்தின் முதல்கட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ள இயக்குனர் முத்தையா விரைவில் இப்படம் குறித்த தைகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேநேரம் சூர்யா 'எஸ் 3' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்