ஆப்நகரம்

விஜய் 63 படத்தில் 3 நடிக்கும் கதாநாயகிகள்?

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 19 Jan 2019, 2:53 pm
சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil vijay


தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து அட்லி படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

அட்லி இயக்கும் படத்தில் பெரும்பாலும் 2, 3 ஹீரோயின்கள் நடிப்பது வழக்கம். அந்த வகையில் விஜய் 63 படத்திலும் 3 ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா ஆகியோர் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வட சென்னையை களமாக கொண்டு இந்த படம் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்