ஆப்நகரம்

லட்டு மாதிரி வந்திருக்கும் வாய்ப்பு: நயன்தாராவுக்கு பதில் நடிப்பாரா கீர்த்தி?

அறம் 2 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Samayam Tamil 24 Jun 2020, 2:34 pm
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனி ஐ.ஏ.எஸ். ஆக நடித்த அறம் படம் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை காப்பாற்றுவதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் நயன்தாராவின் நடிப்பை பாராட்டினார்கள்.
Samayam Tamil keerthy suresh


இதையடுத்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரானார் கோபி நயினார். 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறம் 2 ஷூட்டிங் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்தபடி படப்பிடிப்பு துவங்கவில்லை. நயன்தாரா அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அறம் 2 வராது என்று நினைத்த நிலையில் தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அறம் 2 படத்தில் மதிவதனியாக நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஃபவர்புல்லான கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அறம் 2 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொண்டாலும் படத்தை பார்ப்பவர்கள் அவரின் நடிப்பை நயன்தாராவின் நடிப்புடன் ஒப்பிட்டு பேசுவார்கள். இந்த விஷயம் கீர்த்திக்கு தெரியாமல் இல்லை. அதனால் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம் யாராவது முடியாது என்று சொல்லும் விஷயத்தை செய்வதற்கு பெயர் போனவர் கீர்த்தி சுரேஷ். முன்னதாக நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கணேசனாக நடித்தார் கீர்த்தி. நாக் அஸ்வின் இயக்கிய நடிகையர் திலகம் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொண்டதை பார்த்தவர்கள் சாவித்ரியாக இவரால் நடிக்கவே முடியாது, வேறு ஆளே கிடைக்கவில்லை என்று இவரை போய் நடிக்க வைக்கிறார்களா என்று விமர்சித்தார்கள்.

நடிகையர் திலகம் படப்பிடிப்பு நடந்தபோது கீர்த்தி சுரேஷ் போய் சாவித்ரியா, இந்த படம் ஓடவே ஓடாது என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் பேசினார்கள். அதை எல்லாம் பார்த்த கீர்த்தி அமைதியாக இருந்து படப்பிடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். படம் ரிலீஸானபோது அதை பார்த்தவர்கள் கீர்த்தியா இது என்று அசந்து போய் பாராட்டினார்கள். மேலும் அந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

எனவே, நயன்தாரா போன்று நடிக்க முடியாது என்று யாராவது கூறினால் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் மதிவதனியாக நடிக்கும் தைரியம் கீர்த்தி சுரேஷிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் புதுமுகம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி கர்ப்பிணியாக நடித்த பெண்குயின் படம் கடந்த 19ம் தேதி ஓடிடியில் வெளியானது.

படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டியிருந்தார்கள். படம் முழுக்க கீர்த்தி சுரேஷ் தான் இருந்தார். எந்த இடத்திலும் அவரின் நடிப்பை குறை சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் திரைக்கதை சொதப்பியதால் பெண்குயின் படம் ரசிகர்களை கவரவில்லை.

லாக்டவுனுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். மேலும் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் சர்கார் வாரி பாட்டா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்