ஆப்நகரம்

கிராபிக்ஸ் மூலம் குண்டாகிறார் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் மூலம் குண்டாக்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

TOI Contributor 2 Jun 2017, 4:38 pm
நடிகை கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் மூலம் குண்டாக்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
Samayam Tamil keerthy suresh will be shown as fat in the savithri through graphics
கிராபிக்ஸ் மூலம் குண்டாகிறார் கீர்த்தி சுரேஷ்!


நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார். இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமந்தா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றார், ஜெமினி கணேஷனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்.

சாவித்ரி கொஞ்சம் குண்டாக இருப்பார், தற்போதுள்ள ஹீரோயின்கள் அளவிற்கு அந்த காலத்தில் எந்த ஹீரோயின்களும் ஸ்லீம் இல்லை. அதனால், கிராபிக்ஸ் உதவியுடன் கீர்த்தி சுரேஷை கொஞ்சம் குண்டாக்கி காட்டவுள்ளார்களாம். சமீபத்தில் குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி-2வில் ஒல்லியாக காட்டியது குறிப்பிடத்தக்கது.

Keerthi Suresh will be shown as fat in the Savithri through graphics!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்