ஆப்நகரம்

Bigil: பிகில் ராயப்பன் சிலை வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

பிகில் படம் நாளைக்கு வெளியாகவுள்ள நிலையில், ராயப்பன் சிலை வடிவமைத்து ரசிகர்கள் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

Samayam Tamil 24 Oct 2019, 4:45 pm
விஜய், நயன் தாரா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் பிகில். உலகம் முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தை விட அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கேரளாவில், விஜய்க்கு என்று சிலையை உருவாக்கி அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று ரசிகர்கள் பிகில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil Vijay


விஜய்யின் பிகில் படத்தை ஏன் பார்க்கணும், எதுக்கு பார்க்கணும்?

ஆம், பிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல் மற்றும் பிகில் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில், ராயப்பன் ரோலுக்கு அதிகமாகவே விஜய் கஷ்டப்பட்டு நடித்துள்ளாராம். ராயப்பன் மீன் வியாபாரியாக படத்தில் வலம் வருகிறார். இந்த நிலையில், தான் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்யை சிலையாக வடிவமைத்து கேரளா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வன்மம் வைத்து அரசு பழி வாங்குகிறது, விஜய் தம்பி அஞ்சக் கூடாது: சீமான்

இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வந்த சுறா படத்திலிருந்து இந்த கொண்டாட்டம் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக சர்கார் படத்திற்கு சாதனை படைக்கும் அளவிற்கு அதிக அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர். கேரளாவில் சிலை என்றால், ஹைதராபாத்தில் 50 அடிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் ரசிகர்கள்.

அட்லி என் கதையை சுட்டுட்டார், பிகிலுக்கு தடை விதிக்கணும்: மேலும் ஒருவர் வழக்கு

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ரசிகர்கள் விஜய் படத்தை கொண்டாடி வருகின்றனர். அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 3 ஆவது படம் பிகில். இதற்கு முன்னதாக தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களுமே விஜய்க்கு ஹிட் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்