ஆப்நகரம்

மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், பேனா, பென்சில் வழங்கி மாஸ் காட்டிய தல அஜித் ரசிகர்கள்!

கேரளாவில் வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், பேனா, பென்சில் என்று பலவற்றை தல அஜித் ரசிகர்கள் வழங்கி அசத்தியுள்ளனர்.

Samayam Tamil 3 Jun 2019, 8:37 am
கேரளாவில் வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், பேனா, பென்சில் என்று பலவற்றை தல அஜித் ரசிகர்கள் வழங்கி அசத்தியுள்ளனர்.
Samayam Tamil thala


தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களின் ஒருவர் தல அஜித். தனது திறமையால் மட்டுமே தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இவருக்கு, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தல அஜித் பிறந்தநாளுக்கு அவரவர் ஊர்களில், மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம் வழங்குதல், அஜித் பேனருக்கு பாலாபிஷேகம், அன்னதானம் வழங்குதல் என்று பலவற்றை செய்வது வழக்கம். அது அன்றைய தினத்தோடு முடிவதும் இல்லை. ஒவ்வொரு விஷேச தினத்தன்றும், அஜித் ரசிகர்கள் இது போன்ற நலத்திட்டங்களை செய்வது வழக்கம்.

அந்த வகையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அஜித் ரசிகர்கள் இலவசமாக நோட்டுகள், பேனா, பென்சில், அளவுகோல் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கி அசத்தியுள்ளனர். ஆம், கேரளா மாநிலத்தில் வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பாலக்காடு பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் தங்களது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகள், பேனா, பென்சில், அளவுகோல் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள பல பொருட்கள் ஆகியவற்றை வழங்கி மாஸ் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்