ஆப்நகரம்

முட்டா கோமாளிக்கு புரியாது போல..: கலாய்த்தவருக்கு குஷ்பு நெத்தியடி

ட்விட்டரில் தன்னை கலாய்த்தவருக்கு குஷ்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 4 Feb 2020, 2:52 pm
ராஜா ரவி வர்மாவின் புகழ் பெற்ற ஓவியங்களை அடிப்படையாக வைத்து பிரபல புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட்ராம் நடிகைகள் குஷ்பு, ஸ்ருதி ஹாஸன், சமந்தா, நதியா, லிசி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
Samayam Tamil khushbu sundar


அதில் கையில் பழத்தட்டுடன் நிற்பது போன்று குஷ்பு போஸ் கொடுத்துள்ளார். ஓவியத்திற்கும், குஷ்புவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அந்த அளவுக்கு பொருந்தமாக உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் குஷ்புவை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

குஷ்பு என்றாலே வம்பிழுக்க ஒரு கூட்டம் உள்ளது. இந்நிலையில் ஒருவர் நக்கத் கான், இதையே புர்காவில் கற்பனை செய்து பார்க்கவும் என்று ட்வீட் செய்தார். குஷ்பு ஒரு இஸ்லாமியர் என்பதையும், அவரின் இயர் பெயர் நக்கத் கான் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளாராம். இதை பார்த்த குஷ்பு நச் பதில் அளித்துள்ளார்.


Rajinikanth விஜய்க்கு நடக்கல ஆனால் ரஜினிக்கு நடந்துடுச்சே

குஷ்பு தனது கமெண்ட்டில் கூறியிருப்பதாவது,

அட அறிவாளி... அப்போ மண்ணு தான் கற்பனை பண்ணனும்...புர்காவோ இல்லையோ குஷ்பு நக்கத் தான் நக்கத் குஷ்பு தான்...முட்டா கோமாளிக்கு புரியாது போலருக்கு என்று கலாய்த்துள்ளார்.


குஷ்பு போட்ட கமெண்ட்டை பார்த்த அவரின் ரசிகர்களோ, சரியான அடி மேடம். நீங்கள் ஏன் இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Simbu என்னாது, மாநாடு படத்தில் இவரா?: பட்டைய கிளப்பப் போறாரு, குஷியில் சிம்பு ரசிகாஸ்

வழக்கமாக ஒரு குறிப்பிட்ட கட்சியினர் தான் குஷ்புவின் இயற்பெயரை அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்