ஆப்நகரம்

அசிங்கமா கமெண்ட் அடித்த நெட்டிசன்: உன் அம்மா யாருடானு கேட்ட குஷ்பு

தான் ட்விட்டரில் வைத்த ப்ரொஃபைல் பிக்சரை பார்த்துவிட்டு மோசமாக கமெண்ட் அடித்தவருக்கு நெத்தியடி கொடுத்துள்ளார் குஷ்பு.

Samayam Tamil 14 Sep 2020, 3:26 pm
நவரச நாயகன் கார்த்திக் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தன் தந்தையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கவுதம் கார்த்திக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
Samayam Tamil khushbu


குஷ்பு, தனக்கு பிடித்த ஹீரோவாக கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார். தன் மகள்கள் முரளிபாவை மிஸ் பண்ணுவதாக தெரிவித்தார். மேலும் தான் கார்த்திக்குடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரொஃபைல் பிக்சராக வைத்தார் குஷ்பு.

குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, இந்த ஜோடி சூப்பர் ஹிட் ஜோடி என்று பாராட்டினார்கள். ஆனால் சமூக வலைதளவாசி ஒருவரோ, அசிங்கமாக கமெண்ட் அடுத்து இது தான் கூத்தாடிகளின் வாழ்க்கை என்றார்.

அந்த கமெண்ட்டை பார்த்த குஷ்புவால் பதில் அளிக்காமல் இருக்க முடியவில்லை. குஷ்பு கூறியிருப்பதாவது,
ஒரு பெண்ணின் புகைப்படத்தை டிபியாக வைத்திருக்கிறீர்கள்...நீங்கள் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும். உன் அம்மா யாருடா? கூத்தாடி பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்க என்று கேட்டுள்ளார்.

குஷ்புவின் கமெண்ட்டை பார்த்த கஸ்தூரியோ,
அம்மா யாருடானு ஈசியா கேள்வி கேட்டுவிட்டீர்கள் குஷ்...நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து இது போன்று கேவலப்படுத்துவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் கமெண்ட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

இது போன்ற முட்டாள்களுக்கு எல்லாம் பதில் அளிக்காதீர்கள் குஷ்பு. அவர் அந்த குரூப்பை சேர்ந்தவர். அதனால் தான் உங்களை விளாசுகிறார். அந்த குரூப் ஆட்கள் அப்படித் தான் பேசுவார்கள். திங்கட்கிழமையும், அதுவுமாக இது போன்ற சீப் ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அந்த ஆள் சொல்வதால் நீங்கள் மோசமான பெண்ணாகிவிட மாட்டீர்கள்.

அந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை. வாரத்தின் துவக்க நாளை வீணடிக்க வேண்டாம் குஷ்பு என்று தெரிவித்துள்ளனர்.

குஷ்பு ட்வீட் போட்டால் சிலர் ஒன்று அவரை கூத்தாடி என்று விளாசுகிறார்கள் இல்லை என்றால் நக்கத் தான் என்று மதத்தின் பெயரால் மோசமாக விமர்சிக்கிறார்கள். தன்னைப் பற்றி வரும் தரக்குறைவான கமெண்ட்டுகளுக்கு குஷ்பு அவ்வப்போது நெத்தியடி கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்.

குஷ்பு தன் மகள்களுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டால் அந்த இரண்டு பேரும் சின்ன பிள்ளைகள் என்றும் பாராமல் மோசமாக விமர்சிக்கிறார்கள். அதே சமயம் குஷ்புவுக்கு ஆதரவாக பலர் கமெண்ட் போடத் தவறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிபி-யை அடுத்து குஷ்புவுக்காக பிராத்தனை செய்யும் ரசிகர்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்