ஆப்நகரம்

பாடகி சின்மயிக்கு டீ வாங்க ரூ.20 கடன் கொடுத்த ஏ.டி.எம் பாதுகாவலர்

பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு டீ வாங்க ஏ.டி.எம் பாதுகாவலர் ஒருவர் ரூ.20 கடன் கொடுத்து உதவியுள்ளார்.

TNN 17 Nov 2016, 4:42 pm
சென்னை: பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு டீ வாங்க ஏ.டி.எம் பாதுகாவலர் ஒருவர் ரூ.20 கடன் கொடுத்து உதவியுள்ளார்.
Samayam Tamil kind atm security guard gives singer chinmayi and husband rs 20 for tea
பாடகி சின்மயிக்கு டீ வாங்க ரூ.20 கடன் கொடுத்த ஏ.டி.எம் பாதுகாவலர்


ரூபாய் நோட்டு தடை உத்தரவினால், அமெரிக்காவில் இருந்து இன்று காலை இந்தியா வந்து சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சின்மயி மற்றும் அவரது கணவர் ராகுல் ரவீந்திரன் இருவரிடமும் செல்லுபடியாகும் காசு இல்லாத காரணத்தால் ஏ.டி.எம் பாதுகாவலர் ஒருவர் டீ வாங்க ரூ.20 கடன் கொடுத்த சம்பவம் குறித்து சின்மயி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது நஐம் அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவில் இருந்ததோம். விமான நிலையத்தில் இறங்கியதும் ரூபாய் நோட்டு தடை குறித்து அறிந்து தனது கணவர் ராகுல் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பணி முடிவடைய குறைந்தது 2 மணி நேரமாவது ஆகும் என்றுக் கூறிய ஏ.டி.எம் பாதுகாவலர், இருவரும் டீ வாங்கி அருந்த ரூ.20 கொடுத்து உதவி செய்தார் என சின்மயி கூறியுள்ளார்.

ஏ.டி.எம் பாதுகாவலரின் உதவி மனப்பான்மையை முன்னிலைப்படுத்தி சின்மயி பதிவிட்டிருந்த பதிவிற்கு, டீ-க்கு டெபிட் கார்டில் பணம் செலுத்தியிருக்கலாம் என ஒருவர் கூறியதற்கு, அந்நேரத்தில் நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று டீ அருந்த வேண்டுமென்ற அவசியம் ஏற்படவில்லை, மேலும், எத்தனை டீ கடைக்காரர்களிடம் டெபிட் கார்டில் பணம் செலுத்தும் வசதி உள்ளது என்பதை எனக்கு கூறுங்கள் என சின்மயி கூறியுள்ளார்.

எனினும், தனது பதிவில் மத்திய அரசின் ரூ.500மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்