ஆப்நகரம்

women's day திரௌபதி படத்துக்கு பெண்களை அழைத்துச் சென்ற ஆளுநர்!

மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்களை திரௌபதி படத்தை பார்க்கச் செய்துள்ளார் புதுச்சேரி ஆளுநர்.

Samayam Tamil 6 Mar 2020, 11:05 am
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மாளிகையில் பணிபுரியும் பெண்களை திரௌபதி படத்தை பார்க்க ஏற்பாடு செய்துள்ளார். அவர்களது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர்.
Samayam Tamil draupathi


இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது,

பெண்மையை கொண்டாடுவோம்! புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்களை திரௌபதி படத்துக்கு அழைத்துச் சென்றுள்ளோம்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிரண்பேடியின் இந்த செயலை பலர் பாராட்டியுள்ளனர். இந்த படத்தின் இயக்குநர் மோகன் இதே ட்விட்டில் நன்றியை தெரிவித்துள்ளார்.



முன்னதாக, இந்த படத்தை அர்ஜூன் சம்பத், எச்.ராஜா உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். பெண்களுக்கான படம், அப்பாக்களுடன் மகள்கள் பார்க்க வேண்டிய படம் என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

கிரௌட் ஃபண்டிங் முறை மூலம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் திரௌபதி படத்தை பார்த்தவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது இந்த படம். முன்னதாக படத்தைக் காண பா.ரஞ்சித்தை அழைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் மோகன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்