ஆப்நகரம்

அக்.5 முதல் 'கொடி' இசை

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' திரைப்படத்தின் இசை வருகிற அக்.5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

TNN 2 Oct 2016, 11:42 am
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' திரைப்படத்தின் இசை வருகிற அக்.5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil kodi audio to be released on october 5
அக்.5 முதல் 'கொடி' இசை


அரசியல்-காதல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அண்ணன்-தம்பி என மாறுபடும் தனுஷுக்கு த்ரிஷா மற்றும் 'பிரேமம்' புகழ் நாயகி அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

#kodi #d31 a santosh Narayanan musical. #massaudio pic.twitter.com/5SSy0VNv5f — Dhanush (@dhanushkraja) October 2, 2016 ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள இப்படத்தை கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் 'கொடி' ஆகும். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பபர்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்