ஆப்நகரம்

Jasprit Bumrah: என்னது பும்ராவோடு காதலா? சிரித்துக் கொண்டே பதிலளித்த அனுபமா பரமேஸ்வரன்!

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள அனுபமா பரமேஸ்வரன் சிரித்துக் கொண்டே அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2019, 2:16 pm
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள அனுபமா பரமேஸ்வரன் சிரித்துக் கொண்டே அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
Samayam Tamil bhu


பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். தமிழில் தனிஷுடன் அவர் கொடி படத்தில் நடித்தார். அப்போது தான் தனுஷுடன் கொடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்டியவர் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் தொடர்சியான பதிவுகள் டப்மாஸ் மூலம் ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வந்தார். இப்போது துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். விரைவில் அவர் ஒரு படம் இயக்கப்போவதாகதெரிகிறது.

Anupama Parameswaran: நடிகை அனுபமா இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா?



இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை காதலிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் பாலோ செய்து கொள்வதால் இது போன்று செய்திகள் வெளியானது என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, சிரித்துக் கொண்டே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இது போன்று வதந்தி வருவது பொதுவானது தான் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக பும்ரா ராஷி கண்ணா உடன் பும்ரா காதலில் இருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்