ஆப்நகரம்

விரைவில் வெளியாகிறது ”கொடி” பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தனுஷ்,திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

TNN 25 Sep 2016, 1:30 pm
தனுஷ்,திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.
Samayam Tamil kodi first look motion poster to be released soonsays dhanush
விரைவில் வெளியாகிறது ”கொடி” பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!


எதிர் நீச்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ”கொடி”.இந்த படத்தில் தனுஷ்,திரிஷா மற்றும் ’பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தையும் தனுஷின் வுண்டர் பார் நிறுவனமே தயாரித்துள்ளது.

கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட இந்த படம்,பல தடைகளைத் தாண்டி இந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பிற்கு சென்றது.சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்தது.இந்நிலையில் கொடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சமூக வளைதளங்களில் வெளியிடப்படும் என நடிகர் தனுஷ்,தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பான 8 விநாடி மட்டுமே ஓடக்கூடிய ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.

#kodi motion poster on 28th September Wednesday 7pm #diwali2016release pic.twitter.com/7l6E7EP6U0— Dhanush (@dhanushkraja) September 25, 2016

’பொலிடிகல் திரில்லர்’ பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு,சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்