ஆப்நகரம்

'கோடிட்ட இடங்களை நிரப்புக' டிரைலர் வெளியீடு

பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

TNN 2 Dec 2016, 6:21 pm
சென்னை: பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil koditta idangalai nirapuga official trailer unveiled
'கோடிட்ட இடங்களை நிரப்புக' டிரைலர் வெளியீடு


பார்த்திபனின் குருநாதர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு நடித்துள்ள இப்படம் இசை சார்ந்த படமாக உருவாகியுள்ளது. பார்த்திபன் இயக்கத்தில் இதற்கு முன்னதாக வெளியான 'கதை திரைக்கதை வசனம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Pls don't see this pls plz pls Pleaseeee! #KodittaIdangalaiNirappugaTrailerhttps://t.co/gau9ID8KMl— R.Parthiepan (@rparthiepan) December 2, 2016 சாந்தனுவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்துள்ளார். சிம்ரன், தம்பி ராமையா, பார்த்திபன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் 'லேடிக்கா' எனும் இசைக் கருவியை வாசிக்கும் இசை கலைஞராக சாந்தனு நடித்துள்ளார்.

குருநாதர் இயக்குனர் கே.பாக்யராஜிக்கு குருவணக்கம் செய்யும் விதமாக இப்படத்தின் இசையை பாக்யராஜின் பிறந்தநாள் (டிச.4) அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆர்.பார்த்திபன் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்