ஆப்நகரம்

சான்றிதழ் தேர்வில் “யு/ஏ”வுடன் பாஸான “கொலைகாரன்”!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலைகாரன்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 14 May 2019, 3:30 pm

ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘கொலைகாரன்’. இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை தின சிறப்பு திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
Samayam Tamil kolaigaran


படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு எதிர்பார்த்தபடியே ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படம் சென்சார் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

விஜய் ஆண்டனியின் புத்திசாலித்தனமான கொலைகள்: கண்டுபிடிக்கும் ஆக்ஷன் கிங்: கொலைகாரன் டிரைலர்!


இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியும் ஆக்சன் கிங் அர்ஜூனும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்