ஆப்நகரம்

#குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை கண்டிக்கின்றோம்: உதயநிதி ஸ்டாலின்

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்துள்ளதற்கு கோலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 7 May 2020, 10:49 am
கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. டோக்கன் வாங்கிக் கொண்டு குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு வரிசையில் நிற்பதும், வட்டங்களில் தாவிக் குதித்து குதித்து சிரித்தபடி செல்வதுமாக உள்ளனர்.
Samayam Tamil udhayanidhi stalin


டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தமிழ் திரையுலக பிரபலங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த கொரோனா ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழர்களின் #குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். #குடிகெடுக்கும்_எடப்பாடி என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
நடிகரும், கலை இயக்குநருமான கிரண் ட்வீட்டியிருப்பதாவது, கிட்டத்தட்ட 45 நாட்களாக தனித்து இருந்து, விழித்து இருந்தோம்..! அதான், கூடி குலாவ கடை திறக்கிறாங்க போல என்று தெரிவித்துள்ளார்.
யோகி பாபு எதுவும் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவதை தான் இப்படி சூசகமாக தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.
இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை திரௌபதி பட இயக்குநர் மோகனும் கண்டித்துள்ளதுடன், கிண்டலும் செய்துள்ளார்.

கார்த்திக் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கக் கூடாது: சுசித்ரா

அடுத்த செய்தி

டிரெண்டிங்