ஆப்நகரம்

அதற்குள் என்ன அவசரம் விவேக், இப்படி ஏமாத்திட்டீங்களே: ரசிகர்கள் கண்ணீர்

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் உயிரிழந்த அதிர்ச்சியில் ரசிகர்களும், திரையுலகினரும் இருக்கிறார்கள். அதற்குள் என்ன அவசரம் என்று சென்றுவிட்டீர்கள் என பலரும் கேட்டுள்ளனர்.

Samayam Tamil 17 Apr 2021, 10:04 am

ஹைலைட்ஸ்:

  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் மரணம்
  • விவேக் மரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
  • விவேக்கிற்கு திரையுலகினர் அஞ்சலி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil vivek
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு எக்மோ சிகிக்சை அளிக்கப்பட்டது.
விவேக் நிலைமை கவலைக்கிடம், 24 மணிநேரம் கழித்தே முன்னேற்றம் தெரிய வரும்: மருத்துவர்கள்விவேக்கின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது, 24 மணிநேரம் கழித்து தான் முன்னேற்றம் தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார்.
அவரின் மரணத்தால் ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எத்தனையோ பேரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் அதற்குள் சென்றுவிட்டாரே என்று ரசிகர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

நல்லபடியாக வீடு திரும்புவீர்கள் என்று நினைத்தால் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். விவேக்கின் மரணம் குறித்து திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்து தான் போகிறது. எனினும் பலர் இறப்பர், சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர் என்று விவேக் போட்ட ட்வீட்டை நினைவுகூர்ந்து ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்