ஆப்நகரம்

Koushik: இந்த மரணம் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியுள்ளது... உடைந்து நொறுங்கிய பிரபல நடிகர்!

Koushik: சினிமா விமர்சகர் கவுஷிக் மரணம் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளதாக நடிகர் துல்கர் சல்மான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2022, 10:24 am
சினிமா விமர்சகர் கவுஷிக் மரணம் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளதாக நடிகர் துல்கர் சல்மான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil koushiklm death actor dulquer salman breaks down for koushik
Koushik: இந்த மரணம் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியுள்ளது... உடைந்து நொறுங்கிய பிரபல நடிகர்!



கௌஷிக் மரணம்

பிரபல சினிமா விமர்சகர் கௌஷிக். சமூக வலைதளங்களில் சினிமா தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். பிளாக் ரைட்டராகவும் இருந்து வந்தார் கவுஷிக். நேற்று முன்தினம் மதிய சாப்பாட்டுக்கு பிறகு உறங்க சென்ற அவர் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

Koushik: கௌஷிக்கின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்... கலங்கும் நெட்டிசன்கள்!

அதிர்ச்சி

அவரது நண்பர்கள் போனில் அழைத்தும் மெஸேஜ் அனுப்பியும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் தூக்கத்திலேயே அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது தெரியவந்தது. கௌஷிக்கின் திடீர் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதயம் நொறுங்கிவிட்டது

இந்நிலையில் பிரபல நடிகரான துல்கர் சல்மான், கௌஷிக் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் இது உண்மையிலேயே இதயத்தை நொறுக்கிவிட்டது. இது உண்மையாக இருக்கக்கூடாது என நான் வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினர் எப்படி இருக்க போகிறார்கள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

Aditi Shankar: அடி பலமோ... அதிதி எனக்கு தங்கச்சி... ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டு அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்!

வாழ்க்கை சிறியது

டிவிட்டர் மூலமும் சில நேரடி சந்திப்புகளின் மூலமும் நாம் ஒருவரை ஒருவர் அறிவோம். நீங்கள் எப்போதும் அன்பையும் ஆதரவையும் கொடுத்துள்ளீர்கள்.. என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் வாழ்கை ரொம்பவும் குறுகியது. RIP சகோதரரே.. நல்ல சினிமாவுக்கு எப்போதும் துணை நின்றதற்கும் ஊக்கத்திற்கும் கருணைக்கும் நன்றி.

தாக்கியுள்ளது

இந்த ட்வீட்களில் என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. இது என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளது. நான் மிகவும் வருந்துகிறேன். என குறிப்பிட்டுள்ளார். கவுஷிக் மரணத்திற்கு முன்பு கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள சீதா ராமம் படத்தின் வசூல் குறித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசித்து ரசித்து...பொறாமைப்பட வைக்கும் விக்கி அன்ட் நயன்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்