ஆப்நகரம்

Koushik: கௌஷிக்கின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்... கலங்கும் நெட்டிசன்கள்!

Koushik: இளம் திரை விமர்சகர் கௌஷிக்கின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து கலங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Samayam Tamil 16 Aug 2022, 9:12 pm
பிரபல சினிமா விமர்சகர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில் அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது.
Samayam Tamil koushiks last whatsapp status goes viral
Koushik: கௌஷிக்கின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்... கலங்கும் நெட்டிசன்கள்!



சினிமா விமர்சகர்

பிரபல சினிமா விமர்சகர் கௌஷிக். சமூக வலைத்தளங்கள் மூலம் சினிமா செய்திகள், சினிமா அப்டேட்டுகள், சினிமா விமர்சனங்கள் போன்ற தகவல்களை ரசிகர்களுக்கு கூறி வந்தவர் கௌஷிக். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் கௌஷிக்கை பின்தொடர்ந்து வந்தனர்.

Aditi Shankar: அடி பலமோ... அதிதி எனக்கு தங்கச்சி... ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டு அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்!

மீண்டும் எழவில்லை

இந்த நிலையில், கௌஷிக் நேற்று மாலை உறங்க சென்ற கௌஷிக் மீண்டும் எழவில்லை. தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

பிரபலங்கள் இரங்கல்

36 வயதே ஆன கௌஷிக்கின் மரணம் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா, வெங்கட் பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசித்து ரசித்து...பொறாமைப்பட வைக்கும் விக்கி அன்ட் நயன்!

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

இந்நிலையில் கவுஷிக்கின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது. அதில் உடல் நலன்தான் சொத்து... மத்தது எல்லாமே அடுத்துதான். வலியை மறந்துவிடுங்கள்.. ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ஃபாலோயர்கள் மாரடைப்பில் மரணமடைந்தவர், எப்படி தீர்க்கதரிசி போல் இப்படி ஒரு ஸ்டேட்டஸை வைத்தார் என கலங்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்