ஆப்நகரம்

சர்ச்சைக்குரிய போட்டோவால் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட பிரபல நடிகை!

பிரபல நடிகை கீர்த்தி சனோன், சர்ச்சைக்குரிய ஒரு போட்டோவை வெளியிட்டு, நெட்டிசன்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

Samayam Tamil 11 Aug 2018, 1:53 pm
மும்பை: பிரபல நடிகை கீர்த்தி சனோன், சர்ச்சைக்குரிய ஒரு போட்டோவை வெளியிட்டு, நெட்டிசன்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
Samayam Tamil Kriti Sanon


நடிகைகள் பெரும்பாலும் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோஷுட் எடுப்பது வழக்கம். சில போட்டோக்கள் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்றமாதிரி இருக்கும். அதில் ஒரு சில புகைப்படங்கள் அவர்களை பிரச்னைகளில் மாட்ட வைத்துவிடும். அப்படி ஒரு நிலைமை தான் தற்போது நடிகை கீர்த்தி சனோனுக்கு வந்துள்ளது.

அவர் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தினர். அவர் பின்னணியில் ஒரு ஒட்டகச்சிவிங்கி தொங்கிக்கொண்டிருப்பது போல காட்சி இருந்தது. அந்த புகைப்படம் வெளியானதும் நெட்டிசன்கள் கீர்த்தி சனோன் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதுகுறித்து அவரை வைத்து போட்டோ எடுத்த பத்திரிகை விளக்கம் தந்தது. “அந்த ஒட்டகச்சிவிங்கி பதப்படுத்தி வைக்கப்பட்ட ஒன்று. அது தொங்கவிடப்படவில்லை. முதுகில் பலூன் கட்டி பறக்கிறது” என அவர்கள் கான்செப்ட் பற்றி கூறினர். இருந்தாலும் நெட்டிசன்கள் நடிகை கீர்த்தி சனோனை விடுவதாகவில்லை.

Kriti Sanon released her photo, which is viral in social media.

அடுத்த செய்தி

டிரெண்டிங்