ஆப்நகரம்

பாலகிருஷ்ணாவுடன் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்!

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்ததாக பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 29 Apr 2019, 5:11 pm
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர். ரஜினி, கமல், அஜித், விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். இந்நிலையில் ரஜினி தற்போது நடித்து வரும் ‘தர்பார்’ படத்தை அடுத்து இவர் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கே.எஸ்.ரவிக்குமார் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Samayam Tamil KS-ravikumar


இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார், என்.டி.ஆர். பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே இருவரும் ‘ஜெய்சிம்மா’ என்ற படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்