ஆப்நகரம்

நடிகர் கும்கி அஸ்வினுக்கு ஜூன் 24ம் தேதி திருமணம்! பெண் யார் தெரியுமா?

பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அஸ்வின் ரவிக்கு வரும் 24ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

Samayam Tamil 20 Jun 2020, 2:56 pm
இயக்குனர் ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் அஸ்வின் ராஜா ஆர்யா மற்றும் சந்தானம் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர் ஆர்யா சந்தானம் இருவரும் இணைந்து துவங்கும் டுதொரியல் காலேஜில் மாணவராக அஸ்வின் ராஜா நடித்திருந்தார் அந்த படம் காமெடிக்காக பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அரசின் ராஜா நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது
Samayam Tamil Asvin Raja


அந்த படத்திற்கு பிறகு அஸ்வின் ராஜாவே பெரிய அளவில் பாஸ்கர் ஆக்கியது கும்கி திரைப்படம் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான அந்த படத்தில் உண்டியல் என்ற ரோலில் நடித்திருந்தார் அஸ்வின். இந்த படத்தில் தம்பி ராமையா, லட்சுமி மேனன் என பலர் நடித்து இருந்தனர்.

அந்த படத்திற்கு பிறகு கும்கி அஸ்வின் என்றுதான் இவரை ரசிகர்கள் சினிமாத்துறையினர் அழைக்கத் துவங்கினார்

அதற்கு பிறகு தற்போது வரை பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார் அஸ்வின் தற்போது வரும் 24ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் வி சுவாமிநாதன் என்ற தயாரிப்பாளரின் மகன் தான் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வினுக்கும் அவர் 4 வருடமாக காதலித்து வரும் வித்யா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் வரும் ஜூன் 24ஆம் தேதி வீட்டிலேயே திருமணம் நடைபெற உள்ளது. அவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் நிச்சயமாகி உள்ளது.

அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த திருமண விழா சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது

வித்யா ஸ்ரீ சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள். அவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவர்.

திருமணம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தற்போது வாழ்த்துக் கூறி வருகின்றனர்

கும்கி அஸ்வினின் திருமணம் கொரோனா லாக் டவுன் காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்