ஆப்நகரம்

‘டிராபிக் ராமசாமி’யில் இணைந்த குஷ்பு, சீமான்!

எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வரும் ‘டிராபிக் ராமசாமி‘ படத்தில் குஷ்புவும், சீமானும் இணைந்துள்ளனர்.

Samayam Tamil 27 Feb 2018, 6:46 pm
எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வரும் ‘டிராபிக் ராமசாமி‘ படத்தில் குஷ்புவும், சீமானும் இணைந்துள்ளனர்.
Samayam Tamil kushboo and seeman will join in traffice ramasamy
‘டிராபிக் ராமசாமி’யில் இணைந்த குஷ்பு, சீமான்!


சமூக நலனில் அக்கறை கொண்டவர் டிராபிக் ராமசாமி. இவருடைய வாழ்க்கை வரலாறு, ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளர் விக்கி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசியலிலும், கொள்கையிலும் மாறுபட்டவர்களாக இருந்து வரும் குஷ்பு மற்றும் சீமான் இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். கதையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான வேடத்தில் இவர்கள் இருவரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்