ஆப்நகரம்

அருண் விஜய்யின் குற்றம் 23 படத்தின் டிரெய்லர்

அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் குற்றம் 23 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

TNN 2 Sep 2016, 1:16 am
ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ’குற்றம் 23’. சினிமாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து ரெதான் தி சினிமா பீப்பல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக சாட்டை நாயகி மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
Samayam Tamil kuttram 23 movie trailer
அருண் விஜய்யின் குற்றம் 23 படத்தின் டிரெய்லர்


மேலும், இப்படத்தில் வம்சி கிருஷ்ணா, விஜயகுமார், நாடோடிகள் அபிநயா, அரவிந்த், ஆகாஷ், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கதாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல் ஒன்றைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உண்மைக் கதையை எடுத்துக்கூறும் இப்படம் மெடிக்கல் க்ரைம் தொடர்பான கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் இப்படத்தின் நாயகன் அருண் விஜய். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்