ஆப்நகரம்

குறும்படம் மூலம் இயக்குனரான ‘குற்றம் கடிதல்’ பட நடிகை!

‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த நடிகை ராதிகா பிரசித்தா, ஒரு குறும்படத்தை இயக்கி, இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

Samayam Tamil 24 Jan 2019, 5:48 pm
தமிழ் சினிமாவில் ‘குற்றம் கடிதல்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா பிரசித்தா. இவர் இதையடுத்து எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகை ராதிகா ‘ஐ எக்ஸிட்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இவரே நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர் இந்தப் படத்திற்கு கதை வசனமும் எழுதியுள்ளார்.
Samayam Tamil radhika prachitha


இந்த குறும்படம், கொச்சி பட விழாவில் சர்வதேச குறும்படங்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது. மேலும் டெல்லியில் நடந்த சர்வதேச பட விழாவிலும் இப்படம் கலந்து கொண்டு விருது வாங்கியது. தொடர்ந்து இந்த குறும்படம் பல்வேறு பட விழாக்களிலும் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்