ஆப்நகரம்

ரஜினியிடம் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன்: ஹூமா குரேஷி!

‘காலா’ படப்பிடிப்பின் போது ரஜினியிடம் ஏராளமான நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று நடிகை ஹூமா குரேஷி கூறியுள்ளார்.

TNN 20 Sep 2017, 7:21 pm
‘காலா’ படப்பிடிப்பின் போது ரஜினியிடம் ஏராளமான நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று நடிகை ஹூமா குரேஷி கூறியுள்ளார்.
Samayam Tamil l learnt lot of things from rajinikanth says huma qureshi
ரஜினியிடம் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன்: ஹூமா குரேஷி!


இயக்குனர் ரஞ்சித் ‘கபாலி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து ‘காலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன்சமுத்திரகனி, நானா படேக்கர், அஞ்சலி பாட்டில், சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண்டே, சம்பந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் படத்தில்பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியிடம் தான் நிறைய விஷங்களை கற்று கொண்டதாக ஹூமாதெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஹூமா கூறியிருப்பதாவது... “காலா படத்தில் ரஜினியுடன் எனக்கான காட்சிகள் ரொம்பவே ஸ்பெஷலானது. அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமானவிஷயங்கள் உள்ளன. நானும் கற்று வருகிறேன். அவர் ஒரு பெரிய ஸ்டார் நடிகர், அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை சிறப்பாக கருதுகிறேன்”என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்