ஆப்நகரம்

தர்பார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிப்பதற்கு ரூ.6 கோடி வரையில் நயன்தாரா சம்பவளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 24 May 2019, 11:03 am
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிப்பதற்கு ரூ.6 கோடி வரையில் நயன்தாரா சம்பவளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
Samayam Tamil nayan


பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னையில் இருக்கிறார். இந்த மாத இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது. இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு நயன் தாரா ரூ.6 கோடி வரையில் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்