ஆப்நகரம்

தியேட்டர் பற்றாக்குறையால் இன்று வெளியாகவுள்ள 2 படங்கள் ரிலீஸ் இல்லை!

இன்று வெளியாகவுள்ள இரண்டு படங்களுக்கு போதிய தியேட்டர் கிடைக்காததால் அவற்றின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Oct 2018, 5:40 pm
கடந்த சில வாரங்களாக பெரிய பட்ஜெட் படங்களும், பெரிய நடிகர்களின் படங்களும்தான் திரையரங்குகளில் வெளியாகின. அதனால் சின்ன பட்ஜெட் படங்கள் கடந்த வாரம் வெளியாகவில்லை. இந்த வாரம் அதாவது இன்று ‘ஆண் தேவதை’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’, ‘மனுசங்கடா’, ‘கூத்தன்’, ‘களவாணி சிறுக்கி’, ‘மூன்றாவது கண்’, ’அமாவாசை’ ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil chinema theaters


இந்த நிலையில் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படம் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் இன்று வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆண் தேவதை’ பட தயாரிப்பு பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில் ரூ22 லட்சத்தை தயாரிப்பாளர் திருப்பி தராததால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த படத்தை நாளை திரையிட கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இந்த இரண்டு படங்களும் இன்று வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்