ஆப்நகரம்

லட்சுமி மேனன் ரிட்டர்ன்ஸ்: நான்கு வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறார்

நான்கு வருடங்களுக்கு பிறகு நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார். முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Samayam Tamil 13 Mar 2020, 4:24 pm
லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் தான் நடித்திருந்தார். ரத்ன சிவா இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
Samayam Tamil Lakshmi Menon returns to Kollywood


அதன் பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார் லட்சுமி மேனன். தன் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாக கூறியிருந்தார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்த அவர் திடீரென சினிமாவில் இருந்து ஒதுங்கியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் லக்ஷ்மி மேனன்.

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தான் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

முத்தையாவின் முந்தைய படங்களான குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களிலும் லட்சுமி மேனன் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கி நடைபெறவுள்ளது.

முத்தையாவுடன் கவுதம் கார்த்திக்கிற்கு இது இரண்டாவது படம். தேவராட்டம் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்