ஆப்நகரம்

பணம் சம்பாதிக்க அடுத்தங்க முதுகில் ஏறி பயணிப்பதா? இயக்குனரை காட்டமாக திட்டிய பிரபல நடிகை!

விரைவில் பணம் சம்பாதிக்க இப்படியா அடுத்தவங்க முதுகில் ஏறி பயணிப்பதா என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘தமிழ் படம் 2’ இயக்குனரை காட்டமாக திட்டியுள்ளார்.

Samayam Tamil 12 Jul 2018, 7:35 pm
விரைவில் பணம் சம்பாதிக்க இப்படியா அடுத்தவங்க முதுகில் ஏறி பயணிப்பதா என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘தமிழ் படம் 2’ இயக்குனரை காட்டமாக திட்டியுள்ளார்.
Samayam Tamil Lakshmy Ramakrishnan


இன்று வெளியாகியுள்ள ‘தமிழ் படம் 2’வில் தமிழ் சினிமாவை அதிகமாக கலாய்த்துள்ளனர். அதிலும் மாஸ் ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், ஆகியோரின் படங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் பற்றியும், இந்தப் படத்தின் இயக்குனரைப் பற்றியும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். “விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக இப்படியா அடுத்தவர்கள் முதுகில் ஏறி பயணிப்பது?

தமிழ் சினிமா துறையில் இன்னும் பல பல நல்ல திறமையான படைப்பாளிகள் இருக்கின்றனர்” என லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ்படத்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கியுள்ளார்.

Lakshmy Ramakrishnan scolds Tamizh Padam 2 director C S Amudhan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்