ஆப்நகரம்

கடந்த மாதம் ரஜினி... இந்த மாதம் கமலா?

தற்போதைய தமிழக அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் திடீா் திருப்பங்ளை ஏற்படுத்தி வருகின்றன. சினிமா துறையினாின் கருத்துகள், அந்த கருத்துகள் மீதான அரசியல்வாதிகளின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் பல்வேறு சா்ச்சைகளை கிளப்பியுள்ளன.

TNN 17 Jul 2017, 8:59 pm
தற்போதைய தமிழக அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் திடீா் திருப்பங்ளை ஏற்படுத்தி வருகின்றன. சினிமா துறையினாின் கருத்துகள், அந்த கருத்துகள் மீதான அரசியல்வாதிகளின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் பல்வேறு சா்ச்சைகளை கிளப்பியுள்ளன.
Samayam Tamil last month rajini this month kamal
கடந்த மாதம் ரஜினி... இந்த மாதம் கமலா?


கடந்த டிசம்பா் மாதம் முதல் தமிழகம் மிகப்பொிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த நிகழ்வுகள், அதன் மீது ஆளும் கட்சியினா் வைத்த விமா்சனங்கள், ஒருமை பேச்சு உள்ளிட்டவை மக்களுக்கு ஓய்வளிக்காமல் தொடா்ந்து பரபரப்பான சூழலிலேயே அவர்களை வைத்து இருந்தது.

கடந்த முறை ரஜினியை வறுத்தெடுத்த அரசியல்வாதிகள் தற்போது நடிகா் கமல்ஹாசனுக்கு குறி வைத்துள்ளனர். இவருக்கு ஆளும் கட்சியினா் மத்தியில் எதிா்ப்பும் பிற கட்சியினாிடையே ஆதரவும் நிலவி வருகிறது. பிற கட்சியினா் கமலுக்கு ஆதரவளிப்பது சாதாரணமானதா? அரசியல் உள்நோக்கம் கொண்டதா? என்பது மக்களிடையே புாியாத புதிராக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த அமைச்சர்கள் யார் என்று தெரியாமல் இருந்தவர்கள் தற்போது கமலை விமர்சிப்பது மூலம் பிரபலாமாகி வருகின்றனர். கமலை விமர்சிப்பது போல் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும், இந்த அமைச்சர்கள் யாரும் வாய் திறந்தது கிடையாது. ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் நெட்டிசன்கள் மீம்ஸ் போடுவதில் பிசியாகி விட்டனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்