ஆப்நகரம்

‘ஐதராபாத் பிரியாணியை’ ருசித்து சாப்பிடும் லாவண்யா!

நடிகை லாவண்யா திரிபாதி படப்பிடிப்பின் போது ‘ஐதராபாத் பிரியாணியை’ விரும்பி சாப்பிடுகிறாராம்.

TNN 18 Feb 2017, 5:41 pm
நடிகை லாவண்யா திரிபாதி படப்பிடிப்பின் போது ‘ஐதராபாத் பிரியாணியை’ விரும்பி சாப்பிடுகிறாராம்.
Samayam Tamil lavanya tasted hyderabad biryani
‘ஐதராபாத் பிரியாணியை’ ருசித்து சாப்பிடும் லாவண்யா!


நடிகை லாவண்யா திரிபாதி ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர். தற்போது ‘மாயவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நாக சைதன்யா, சர்வானந்த் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். லாவண்யா சைவ உணவு பிரியர். ஆனால், நடிப்புக்கு வந்த பிறகு ஐதராபாத் பிரியாணியை விரும்பி சாப்பிடுகிறாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில், ’‘நான் சைவ உணவை விரும்பி சாப்பிடுவேன். ஆனால் நான் இப்போது அசைவ உணவை விரும்பி சாப்பிடுகிறேன். மேலும் ஐதராபாத் பிரியாணி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சிக்கன் பிரியாணி வாங்கி அதிலிருக்கும் சிக்கன் பீஸ்களை தூக்கி எறிந்துவிட்டு குஷ்கா மட்டும் விரும்பி சாப்பிடுவேன். ஏனென்றால் வழக்கமான வெஜிடபிள் பிரியாணியைவிட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும் என்பதால் மிகவும் பிடிக்கும். தென்னிந்திய உணவுகள் குறிப்பாக இட்லி, தோசை போன்றவைகளை விரும்பி சாப்பிடுவேன்’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்