ஆப்நகரம்

ரத்தின சிவா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பிரபல இயக்குனர் ரத்தின சிவா இயக்கவிருக்கும் புதுப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 18 Oct 2016, 12:23 pm
சென்னை: நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பிரபல இயக்குனர் ரத்தின சிவா இயக்கவிருக்கும் புதுப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil lawrence to team up with rathina siva
ரத்தின சிவா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?


தற்போது கன்னட படமான 'சிவலிங்கா' படத்தின் ரீமேக்கில் லாரன்ஸ் நடித்து வருகிறார். அதனிடையே, சிரஞ்சீவி நடிக்கும் 'கைதி எண்:150' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமைத்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் ரத்தின சிவா, 'லாரன்சிடம் கதை கூறியதாகவும், தற்போது பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறது. இருவரும் அதிகாரபூர்வமாக எவ்வித ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. லாரன்ஸ் இந்தப் படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் முடிவாகாத நிலையில், இது குறித்து பேச எதுவும் இல்லை' என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்