ஆப்நகரம்

அஜித் கையெழுத்துடன் பரவிய போலி அறிக்கை: சட்ட ஆலோசகர் எச்சரிக்கை

அஜித்தின் பெயர் மற்றும் கையெழுத்துடன் நேற்று ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவியது. அது போலி என அஜித்தின் சட்ட ஆலோசகர் கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Mar 2020, 4:24 pm
நடிகர் அஜித் சமூக வலைத்தளங்களில் இணையப்போகிறார் என நேற்று ஒரு அறிக்கை பரவியது. ஆனால் அது போலியானது என்று அஜித்தின் சட்ட ஆலோசகர் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Ajith Kumar


"மார்ச் 6, 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூகஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூகஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது போல் உள்ளது. அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களின் பெயருடன் போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தையும் இணைத்திருப்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது."

"அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்.

அஜித்குமார் கீழ்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.

a) அவருக்கு அதிகார்ப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.

b) அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.

c) சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை.

d) மீண்டும் சமூக ஊடங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை."

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்