ஆப்நகரம்

சித்தார்த்துக்கு ஜோடியாகும் மலையாள அறிமுக நடிகை!

மலையாள புதுமுக நடிகை லிஜோ, தற்போது சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 12 Mar 2019, 4:40 pm
பிரபல இயக்குனர் சசி, ‘பிச்சைக்காரன்’ படத்தை அடுத்து தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் சித்தார்த்தும் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். இந்தப் புதிய படத்திற்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குனர்.
Samayam Tamil lijo


இந்தப் படம் அக்கா, தம்பி பாசத்தை சொல்லும் கதையாக உருவாகிறது. அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இதுதான் தமிழில் அறிமுகமாகும் லிஜோவின் முதல் படம். அவரது தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

நடிகை லிஜோவுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்து வருகிறார். இவர் டிராபிக் போலீஸ்காரர் கேரக்டரில் நடித்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ், பைக் ரேஸராக நடிக்கிறார்.தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்