ஆப்நகரம்

Jackpot: கபாலி ஸ்டைலில் ஜாக்பாட்: வைரலாகும் கோட்டையில் நம்ம கொடி பறக்குதா பாடல்!

கபாலி படத்தில் பாடிய நெருப்புடா பாடலைப் போன்று ஜாக்பாட் படத்தில் தெறிக்குதா என்ற பாடலை பாடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

Samayam Tamil 26 Jul 2019, 4:51 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான மாஸ் படம் கபாலி. இதில், ரஜினியுடன் இணைந்து ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், அட்டகத்தி தினேஷ், நாசர், ரித்விகா, கலையரசன், ஜான் விஜய், சங்கிலி முருகன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் இந்தியளவில் 530 மில்லியன் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள நெருப்புடா நெருங்குடா முடியுமா? என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் பாடி அசத்தியிருப்பார். இப்படம் வெளியான போது சமூக வலைதளங்களில் டிரெண்டான பாடல் இது. தற்போது வரை இந்தப் பாடலை 3 கோடி பேர் வரை பார்த்துள்ளனர்.
Samayam Tamil Untitled (11)


டிக் டாக் புகழ் சிறுமி ஆருணி உயிரிழந்த சோகம்!



தற்போது இதே போன்று, அருண்ராஜா காமராஜ் தனது குரலில் தெறிக்குதா என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆம், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம்ஜாக்பாட். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நாளை இப்படத்தின் இசை வெளியீடு இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள தெறிக்குதா வெடிக்குதா கோட்டையில நம்ம கொடி பறக்குதா என்ற பாடலை பாடி ரசிகர்களை மீண்டும் அதிர வைத்துள்ளார். இந்த பாடல் ஜோதிகாவிற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

Agalaathey Single: ஒரே பாட்டில் அன்பு, அரவணைப்பு, பிடிவாதம் என்று எல்லாத்தையும் காட்டிய தல அஜித்!


அவ்வளவு தான்! மார்க்கெட்டை இழக்கும் சந்தானம்: சினிமாவில் தாக்குப்பிடிப்பாரா?

இந்தப் பாடலையும் கபாலி பாடலையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஒரே விதமாக இருப்பது போன்று தோன்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணி இசையும் அதே வரிசையில் வந்துள்ளது. ஆனால், என்ன கொஞ்சம் வித்தியாசம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரித்த கனா இப்படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் சிறந்த இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் பின்னணி பாடகர் என்ற பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். ஆனால், ஒரு பின்னணி பாடகராக கபாலி படத்தில் இவர் பாடிய நெருப்புடா பாடல் உலகெங்கும் வைரலானது எனப்து குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்