ஆப்நகரம்

Director Prabhu: பைக்கில் வந்த எல்கேஜி இயக்குனருக்கு ஹூண்டாய் கார் பரிசு கொடுத்த தயாரிப்பாளர்!

எல்கேஜி படத்தின் இயக்குனர் கே.ஆர்.பிரபுவிற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

Samayam Tamil 4 Mar 2019, 6:00 pm
எல்கேஜி படத்தின் இயக்குனர் கே.ஆர்.பிரபுவிற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil car


இயக்குனர் கேஆர் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஜே.கே.ரித்தேஷ், ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான அரசியல் படம் எல்.கே.ஜி. முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் வகையில், இந்தப்படம் வெளியாகியிருந்தது. அதோடு, படத்தின் இடம்பெற்றுள்ள பாடல்களும், வசனங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், இப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடி வசூல் கொடுத்துள்ளது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ.2.7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், அண்மையில், இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அந்த விழாவிற்கு நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என்று பலரும் காரில் வந்த நிலையில், எல்கேஜி படத்தின் இயக்குனர் என்னவோ பைக்கில் வந்துள்ளார். இதனால், இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குனர் கே.ஆர். பிரபு பைக்கில் வருவதா? என்று கருதிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், இயக்குனர் கேஆர் பிரபுவிற்கு ஹூண்டாய் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த பரிசளிப்பு விழாவின் போது ப்ரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்