தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தீயாய் நடைபெற்று வரும் நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனியை லோகேஷ் கனகராஜ் காப்பி அடித்ததாக ஓட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மகிழ் திருமேனி
2010 ஆம் ஆண்டு வெளியான முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. தொடர்ந்து தடையற தாக்க, மீகாமன், தடம் மற்றும் கடைசியாக கலகத் தலைவன் ஆகி படங்களை இயக்கியிருந்தார். மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த 5 படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.
தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய இரண்டு படங்களிலும் அருண் விஜய்யை இயக்கியிருந்தார் மகிழ்திருமேனி. மீகாமன் படத்தில் ஆர்யாவும், கலகத் தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நடித்திருந்தனர். இந்நிலையில் மகிழ் திருமேனி அடுத்ததாக நடிகர் அஜித்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அஜித்தின் 62 படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது மகிழ் திருமேனி கூறிய கதையை அஜித் ஓகே பண்ணியதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!
விரைவில் அறிவிப்பு
ஏகே 62 படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏகே 62 படத்திற்காக பெரும் தொகையை சம்பளமாக கொடுத்து இயக்குநர் மகிழ் திருமேனியை லைகா நிறுவனம் லாக் செய்துள்ளதாகவும் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும் ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Pradeep Ranganathan: 'மெண்டலான்ஸ்' மீண்டும் சர்ச்சையில் சிக்கிய 'லவ்டுடே' பிரதீப்!
காப்பி அடித்த லோகேஷ்
இந்நிலையில் விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், ஏற்கனவே மகிழ் திருமேனியை காப்பி அடித்தாக ஆதாரத்துடன் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதாவது, மகிழ் திருமேனி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான மீகாமன் திரைப்படத்தை தான் காப்பி அடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். Actors Salary: தளபதி 67... தலை சுற்ற வைக்கும் விஜய்யின் சம்பளம்... அதளபாதளத்துக்கு போன ரஜினி... அஜித்?
மீகாமன் கான்செப்ட்
மீகாமன் படத்தின் கதையும், கமல் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான விக்ரம் படத்தின் கான்செப்ட்டும் ஒன்றுதான் என கூறி வரும் நெட்டிசன்கள் இரண்டு படங்களிலும் இருந்த தேள் சிம்பிள், சிட்டி - சந்தானம், அவினாஷ் - ஜோஷ், பாரதி - பிஜாய், குரு - அடைக்கலம், அருள் - விக்ரம், ஜோதி - ரோலெக்ஸ் என அனைத்து கதாபாத்திரங்களும் ஒன்றாக இருந்தன என கூறி வருகின்றனர். 2014ஆம் ஆண்டு மீகாமன் மூலம் மகிழ் திருமேனி கூறியதை லோகேஷ் கனகராஜ் பட்டி டிங்கரிங் பார்த்து கடந்த வருடம் கூறியதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்தரங்க இடத்தில் குத்தினார்... பிரபல தயாரிப்பாளர் மீது பகீர் புகார் கூறிய விஜயகாந்த் பட நடிகை!
தளபதி 67
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜூன், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. தளபதி 67 படத்தின் டைட்டில் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. Thalapathy 67: தளபதி 67 படத்தில் நடிக்கும் அந்த குட்டி பாப்பா இந்த நடிகரின் மகளா!
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.