ஆப்நகரம்

அர்ஜுன் தாஸ் பட ட்ரெய்லரை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லரை பார்த்து பாராட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Samayam Tamil 14 Apr 2020, 6:58 pm
லோகேஷ் கனகராஜ் தற்போது மாஸ்டர் படத்தினை முழுமையாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவும் வந்தது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக படத்தின் வேலைகள் தற்காலிகமாக ரத்தானது. தற்போது அந்த ஊரடங்கு இன்னும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் அந்தகாரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதை பார்த்த லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.
Samayam Tamil lokesh




வெறித்தனமாக இருக்கிறது என கூறி அர்ஜுன் தாஸை பாராட்டியுள்ளார் லோகேஷ். இதைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் அர்ஜுன் தாஸ். இதுகுறித்த நன்றி தெரிவிக்கும் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மிக்க நன்றி லோகேஷ் சார். மை மாஸ்டர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் இரண்டு படங்களையும் இயக்கியவர் லோகேஷ்தான். அதை குறிப்பிடும்படி மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளார் போல. மேலும் இந்த பதிவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அந்தகாரம் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.



இந்த படத்தின் ட்ரெய்லரை வருண்தவானும் பாராட்டியுள்ளார். அவர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். அவருக்கு நன்றி கூறி பதிலளித்துள்ளார் அட்லீ.

அடுத்த செய்தி

டிரெண்டிங்