ஆப்நகரம்

சாந்தனு பட போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! இராவண கோட்டம் புழுதி பறக்கும் டைட்டில் லுக்

சாந்தனு நடித்து வரும் இராவண கோட்டம் படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்டரை மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கிறார்.

Samayam Tamil 7 Aug 2020, 5:36 pm
சாந்தனு கடைசியாக வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபு சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு ரோலில் அவர் நடித்து முடித்திருக்கிறார். விஜய் நடித்திருக்கும் அந்த படத்தின் ரிலீசுக்காக தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா தற்போது காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சாந்தனு நடித்து வரும் மற்றொரு படமான இராவண கோட்டம் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் இருப்பது போல அந்த போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil Raavana Kottam


"மச்சி சாந்தனு ஆல் த பெஸ்ட். ராவண கோட்டம் டைட்டில் லுக் செம. இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பிரதர் வாழ்த்துக்கள்" என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்களும் இதனை அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இராவண கோட்டம் படத்தின் ஷுட்டிங் சென்ற வருடமே துவங்கியது. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க கோடை காலத்தில் நடப்பது போன்று உள்ளது என்பதால் வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே ஷுட்டிங் நடத்த முடியும் என்கிற நிலை இருக்கிறது. சென்ற வருடம் ஷுட்டிங் துவங்கி நடந்த நிலையில் அதனை மழை காலத்திற்கு முன்பு படக்குழு நிறுத்திக் கொண்டது.

மீண்டும் இந்த வருடம் தொடங்கலாம் என படக்குழு காத்துக் கொண்டிருந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் நிலைமையைத் அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது.

இது பற்றி தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது..

"கடந்த ஆண்டு நாங்கள்‌ படப்பிடிப்பைத்‌ தொடங்கியபோது மிகவும்‌ சாதகமான தட்ப வெட்ப சூழலே நிலவியதால்‌ மழைக்காலம்‌ ஆரம்பிக்கும்‌ முன்பே நாங்கள்‌ படப்பிடிப்பை முடித்து விட்டோம்‌. அவசரத்தில்‌ அள்ளித்‌ தெளித்த கோலமாகிவிடக்கூடாது என்பதிலும்‌, படத்தின்‌ உள்ளார்ந்த சாராம்சத்தை சிதைத்து விடக்கூடாது என்பதிலும்‌ கவனமாக இருந்தோம்‌."

"தற்போதைய வியாபார சூழலை நான்‌ நன்கு அறிந்திருக்கிறேன்‌ என்றாலும்‌, சாந்தனு மற்றும்‌ விக்ரம்‌ சுகுமாரன்‌ திறமை மீது கொண்ட முழு நம்பிக்கை காரணமாக இந்தப்‌ படத்தில்‌ முதலீடூ செய்து, படத்தை எடுக்க இருக்கிறேன்‌. சுமூகமான சூழல்‌ ஏற்பட்ட பிறகு அரசின்‌ அனுமதி கிடைத்ததும்‌, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ நாங்கள்‌ படப்பிடிப்பைத்‌ தொடரவிருக்கிறோம்‌" என அவர் கூறி உள்ளார்.

படம் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதம் ஆவது பற்றி பேசிய சாந்தனு "இந்த கடுமையான சூழ்நிலையிலும்‌ பொறுமை காத்து, எங்களுக்கு ஆதரவாக இருக்கும்‌ தயாரிப்பாளர்‌ கண்ணன்‌ ரவிக்குதான்‌ எங்கள்‌ குழு முதலில்‌ நன்றி செலுத்த வேண்டும்‌. படத்தயாரிப்பு தாமதமாகி நீண்ட போதிலும்‌, பொறுமை காக்கும்‌ அவர்‌,
எங்களிடம்‌ "அவசரம்‌ காட்ட வேண்டாம்‌ சிறப்பான முறையில்‌ படத்தை உருவாக்குங்கள்‌" என்றுதான்‌ சொல்கிறார்‌. தற்போது சூழ்நிலை காரணமாக நாங்கள்‌ அமைதி காத்து வருகிறோம்‌. இராவண கோட்டம்‌' படத்திலிருந்து எனக்கு எந்த லாபமும்‌ வேண்டாம்‌. தொடர்ந்து நல்ல படங்களைத்‌ தயாரிக்க நான்‌ போட்ட முதலீடு மட்டும்‌ திரும்ப வந்தால்‌ போதும்‌" என்று அவர்‌ உறுதிபடக்‌ கூறிவிட்டார்‌ என்று சாந்தனு குறிப்பிட்டு இருக்கிறார்.

தொடங்கியது ராணா - மிஹிகா திருமண கொண்டாட்டம்: சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து

அடுத்த செய்தி

டிரெண்டிங்