ஆப்நகரம்

மாஸ்டர் டிரெய்லர் தேதி இதுவா? வைரலாகும் தகவல்

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துவரும் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என்பது பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Samayam Tamil 15 Mar 2020, 10:59 pm
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் படம் பற்றி நெகிழ்ச்சியாக பேசி வருகின்றனர்.
Samayam Tamil lokesh kanagaraj


மேடையில் பேசும்போது லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ட்ரைலர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார். மார்ச் 22ம் தேதி ட்ரைலர் களமிறங்கும் என கூறியுள்ளார் அவர்.

மாஸ்டர் படம் விஜய்யை வேறு ஒரு கோணத்தில் காட்டும் என கூறியுள்ளார் லோகேஷ்.

விஜய் சேதுபதி பற்றி பேசிய லோகேஷ் "கதை சொல்லும் முன்பே என் மீது நம்பிக்கை இருப்பதாக கூறினார் விஜய் சேதுபதி" என தெரிவித்தார்.

மேலும் இதுவரை வெளிவந்துள்ள மூன்று போஸ்டர்கள் பற்றி பேசிய லோகேஷ், "முதல் போஸ்டர் ஹீரோ அறிமுக சீன், இரண்டாவது போஸ்டர் இடைவேளையில் வருவது, மூன்றாவது போஸ்டர் கிளைமாக்ஸில் வருவது" என கூறியுள்ளார்.

"இந்த படத்திற்கு முதலில் வாத்தி என்று தான் பெயர் வைக்க யோசித்தேன். ஆனால் அது பின்னர் மாஸ்டர் என மாற்றப்பட்டது. கதைக்கு இத்தனை பாடல்கள் தேவைப்பட்டது" எனவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்