ஆப்நகரம்

இது மட்டும் நடந்தால், சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Aug 2020, 8:29 am
கைதி படத்தை அடுத்து விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கொரோனா வைரஸ் பிரச்சனை மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸாகியிருக்கும்.
Samayam Tamil suriya


மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனாலும் அதன் மீதான எதிர்பார்ப்பு மட்டும் குறையாமல் அப்படியே இருக்கிறது. எப்பொழுது ரிலீஸானாலும் மாஸ்டரை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. ரஜினி, லோகேஷ் கூட்டணி சேரும் படத்தை கமல் ஹாஸன் தயாரிப்பார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் ரஜினி, கமல் கூட்டணி சேரும் படத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. பெரிய ஹீரோ நடிக்கும் அந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

என்னய்யா இது, மறுபடியும் முதலில் இருந்தா லோகேஷ்?: கமல், ரஜினி ரசிகர்கள் கவலை

லோகேஷ் தெலுங்கு படம் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியான கையோடு புது பேச்சு கிளம்பியுள்ளது. அதாவது லோகேஷ் சூர்யாவை வைத்து படம் பண்ணப் போவதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தியுடனும் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அது கைதி 2 படமாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தெலுங்கு படத்தை இயக்குவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் சூர்யாவை இயக்கப் போவதாக தகவல் வெளியானதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து தான் படம் பண்ணப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக இல்லை.

சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே சூரர் எப்பொழுது வருவார் என்பது தெரியாமல் உள்ளது.

தியேட்டர்கள் திறந்த உடன் முதல் படமாக சூரரைப் போற்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டதால் சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தாரின் படங்களை வெளியிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சூரரைப் போற்று பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடியில் அல்ல மாறாக தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அந்த படத்தை தயாரித்த சூர்யா அவர்களின் பேச்சை கேட்கவில்லை. அதனால் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் பிறந்தநாள் அன்று வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்