ஆப்நகரம்

ரஜினி இல்லை.. லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போவது இந்த ஹீரோவைத் தான்?

லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்க உள்ளதாக செய்தி வந்த நிலையில், அதற்கு முன்பே மற்றோர் முன்னணி ஹீரோவின் படத்தை இயக்க உள்ளார்.

Samayam Tamil 19 Jun 2020, 11:07 am
லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தினை இயக்கி வருகிறார். அந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் சில வாரங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்றது. 10 முதல் 15 நாட்களுக்காண பணிகள் முடிக்கப் பட வேண்டி இருப்பதாக முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Lokesh Kanagaraj


தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் மாஸ்டர் தான். கொரோனா லாக் டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால் மக்களை மீண்டும் தியேட்டருக்கு அதிக அளவில் ஈர்க்க மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் கேட்டு வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க லோகேஷ் கனகராஜ் அடுத்து யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்பது பற்றியும் அடிக்கடி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் அதில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் முன்பு வெளியானது.

ஆனால் அந்தப்படம் தற்போதைக்கு தூவங்குமா என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது. ஏனென்றால் ரஜினி இன்னும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவில்லை. சிவா இயக்கி வரும் இந்த படம் கொரோனா முழு அடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அண்ணாத்த பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் 40 சதவீதத்திற்கும் மேலான ஷூட்டிங் பாக்கி உள்ளது என கூறப்படுகிறது. அதனால் பொங்கல் ரிலீஸில் இருந்தும் அந்தப் படம் தள்ளிப் போகலாம் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது.

அதனால் ரஜினி தன் ‘அண்ணாத்த’ படத்தை முடித்த பிறகுதான் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்த வருடம் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது. அதனால் ரஜினியை இயக்கும் முன்பே ஒரு புதிய படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் நடிகர் கார்த்தி தான் ஹீரோவாக நடிப்பார் என்றும் கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது.


இது பற்றிய உறுதியான தகவல் கொரோனா பிரச்சினை முடிந்து அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்த பிறகு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. கைதி படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி கூட்டணி சேர்வதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளத்தான் தான் தமிழ் சினிமா துறையினர், ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்புதான் ரிலீஸாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு உரிமையும் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளதால், வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்ய சரியான சூழ்நிலை இருக்குமா என்பதையும் கவனத்தில் கொண்டு தான் தயாரிப்பாளர் ரிலீஸ் தேதி பற்றிய முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்