ஆப்நகரம்

பூட்டிய வீட்டிற்குள் வருடக்கணக்கில் வசித்து வரும் பிரபல நடிகை!

பிரபல நடிகை கனகா, வீட்டை பூட்டிக் கொண்டு பல வருடங்களாக உள்ளே வசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

Samayam Tamil 24 Sep 2018, 4:30 pm
பிரபல நடிகை கனகா, வீட்டை பூட்டிக் கொண்டு பல வருடங்களாக உள்ளே வசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ‘கரகாட்டன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனகா. இவர், பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். நடிகை கனா, முத்துகுமார் என்ற என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார்.
Samayam Tamil kanaka2


தேவிகா சினிமாவில் நடித்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்திற்கும் ஒரே வாரிசு கனகாதான். தனது அம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த பங்களாவில்தான் தற்போது வசித்து வருகிறார் கனகா. தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பிடுங்கி விடுவார்களோ என்ற பயம் கனகா மனதில் பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என கூறப்படுகிறது. அவர், கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வருகிறாராம்.

பெரும்பாலும் அவர் எந்த நல்லது கெட்டதற்கும் வெளியே வருவதில்லை. பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அவர் வசித்து வருவது, அவரை பற்றிய மர்மங்களை மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்