ஆப்நகரம்

தசரா நாளில் கேட்க வேண்டிய பாடல்கள் இதோ!

மகிசாசூரனை சக்தி வதம் செய்த நாள் நவராத்திரி. இந்த நாட்களில் வீடுகளிலும், கோவில்களிலும் பூஜை செய்வது வழக்கம். அப்போது கேட்க வேண்டிய பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Oct 2019, 9:15 pm
துர்கா தேவி, மகிசாசூரனுடன் 8 நாட்கள் போரிட்டு, 9 ஆவது நாளான நவமி நாளில் மகிசாசூரனை வதம் செய்த நாள் நவராத்திரி. இந்த நாட்களில் கோவில்களில் வழிபாடு நடத்தப்படுகின்றன. இதற்கு மறுநாள், தசமி நாளில் தேவதர்கள், ஆயுத பூஜை செய்து கொண்டாடியதைத் தொடர்ந்து விஜயதசமி என்றும் அழைக்கப்படுகிறது.
Samayam Tamil Dussehra Songs


மகிசாசூரனை சக்தி வென்ற நாளில், மைசூரில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவதை தசரா ஊர்வலம் என்றும், நவமியின், சரஸ்வதி தேவியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூஜை செய்து தசமி அன்று ஆயுதபூஜை என்று தொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் இச்சா சக்தியான துர்க்கையின் ஆட்சிக்காலம். அடுத்த 3 நாட்கள், ஞானசக்தியின் வடிவமான லட்சுமியின் ஆட்சிக்காலம், இறுதி 3 நாட்கள் கிரியா சக்தியான சரஸ்வதியின் ஆட்சிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் கேட்க வேண்டிய பாடல்கள் இதோ…






அடுத்த செய்தி

டிரெண்டிங்