ஆப்நகரம்

காதலர் கவினுக்காக சாண்டியிடம் வாக்குவாதம் செய்த லோஸ்லியா

லோஸ்லியா தனது ஆசை காதலருக்காக சாண்டியிடம் வாக்குவாதம் செய்வது போல் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2019, 10:05 am
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஒரே காதல் என்ற விஷயத்தை மட்டுமே காண்பித்து போட்டியாளர்களைப் பயங்கரமாகக் கடுப்பு ஏற்றிவிட்டனர். அதுவும் இந்த கவின், லோஸ்லியா காதல் விவகாரம் எல்லை மீறி சென்று கொண்டு இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் லோஸ்லியா தந்தை அவருக்கு அறிவுரை கூறினார். ஆனால் அதற்கு பிரயோஜனமே இல்லாதது போல் மீண்டும் இருவரும் தங்களது காதல் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
Samayam Tamil bigg boss 3


இந்த நிலையில் இன்றைக்கான முதல் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் லோஸ்லியா தனது காதலர் கவினுக்காக, சாண்டியிடம் வாக்குவாதம் செய்வது போல் உள்ளது. அதில், 'முதல் டாஸ்க்கில் எனக்கு 7வது இடம் கொடுத்து விட்டு அவனுக்கு 6வது இடம் கொடுத்து இருக்கலாம்.



அவன் இப்போது தான் விளையாட வேண்டும் என்று நினைக்கிறான். அவ்வளவு விஷயம் நடந்திருக்கு. பக்கத்திலேயே நீ நண்பன் என்று இருக்கிறாய், நீ அவனுக்கு கொஞ்சம் சப்போர்ட் செய்ய வேண்டும்' என்று சாண்டியைப் பேச விடாமல் வாக்குவாதம் செய்து கொண்டே இருப்பது போல் ப்ரொமோ முடிந்துள்ளது. இதை கண்ட ரசிகர்கள் உங்கள் காதல் லீலைகளை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கோபமாகத் திட்டி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க நேற்றைய டாஸ்கில் சாண்டி, லோஸ்லியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாகச் சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டு லோஸ்லியா கீழே விழுந்தார். இதை பார்த்த கவின் சாண்டியிடம் வம்புடியாக சண்டை போட்டார். இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் இந்த காதல் ஜோடியை வெளியேற்றுங்கள் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். எது எப்படியோ கவின்- லோஸ்லியாவின் மொத்த டார்கெட் தற்போது சாண்டி பக்கம் திரும்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்